பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி
சென்னை: அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கு சராமரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
@சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் புகாரை அடுத்து, ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது அவருக்கு மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருடன் வேறு யாரேனும் இதில் தொடர்பு உடையவர்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் மாணவி பாலியல் வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும் sir என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் என்பவர் கோர்ட்டில் முறையிட அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடிதத்தையே வழக்காக எடுத்துக் கொண்டு உள்ளது.
மேலும் இதன் மீது, உள்துறை செயலாளர், டி.ஜி.பி, மாநகர போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், முதல் தகவல் அறிக்கையை போலீசார் வெளியிடவில்லை. இணையதளத்தில் வெளியான உடன் அது முடக்கப்பட்டு விட்டது. வழக்கு தொடர்பான விரிவானஅறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் எனக்கூறியுள்ளது.
இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள்: விசாரணையின் போது ஒருவர் தான் குற்றவாளி என போலீஸ் மிஷனர் எப்படி முடிவுக்கு வர முடியும். ஒரு வழக்கில் மட்டும் தான் ஞானசேகரனுக்கு தொடர்பு உள்ளது என எப்படி முடிவுக்கு வந்தார்.விசாரணை அதிகாரி கமிஷனருக்கு கீழ் பணிபுரிபவர். அவர் எப்படி மற்றொரு குற்றவாளியை கைது செய்வார்.எந்த விதிகளின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியும்.இதற்கு அரசிடம் அனுமதி வாங்கினாரா?காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டு உள்ளது.பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா.
காவல்துறை தரப்பு: போலீசார் துரத்தியபோது கீழே விழுந்ததால் காலில்பேண்டேஜ் போட்டு உள்ளார்.
தலைமை வழக்கறிஞர்: ஞானசேகரன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் அல்ல. குற்றம்நடந்த 3 நாளில் போலீசாரை பாராட்டாமல் சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர்.
நீதிபதிகள்: குற்றத்தை தடுக்க வேண்டியதும், குற்றவாளியை கைது செய்ய வேண்டியது போலீசாரின் கடமை. அதற்காக பாராட்ட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினர்
தொடர்ந்து நீதிபதிகள்: பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார்அளித்ததற்காக பாராட்டுகள். முதல்தகவல் அறிக்கை வெளியனதற்கு யார் பொறுப்பு? எப்படி கசிந்தது?
போலீசார்: முதல் தகவல் அறிக்கை கசியவில்லை. வெளியான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
நீதிபதி: கசியவில்லை என்றால் ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிர்பயா நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து பல்கலை அறிக்கை அளிக்க வேண்டும். மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை என்ன செய்தது. கல்வி நிறுவனங்களை நம்பித்தான் பெற்றோர் குழந்தைகளை அனுப்பி வைத்துள்ளனர். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க சிறப்பு அதிரடிப்படையை அமைக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர்: ஏற்கனவே சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
நீதிபதிகள்: அங்கு பெண்கள் சென்றிருக்கக்கூடாது. ஆண்களுடன் பேசக்கூடாது எனக் கூற யாருக்கும் உரிமையில்லை. பெண்களுக்கு முழு உரிமை உண்டு. காதல், பெண்களின் தனிப்பட்ட உரிமை எனக்கூறினர்.
மேலும் மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கேள்விகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து (63)
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
28 டிச,2024 - 04:14 Report Abuse
போலீசாரின் கைகள் எப்போதுமே திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கட்டப்பட்டிருக்கும் எனப்து உலகறிந்த நிஜம். இவ்வளவு கேள்விகளை கேட்ட மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வளவு கேள்விகளை போலீசிடம் கேட்பதை விட அந்த துறைக்கு பொறுப்புள்ள மந்திரியை அழைத்து விசாரியுங்களேன்.
பொதுமக்களும் ஆவலோடு அதனை கண்டு ரசிப்பார்கள். உண்மையும் அப்போது வெளிப்பட்டுவிடும். நீங்க போலீசிடம் கேட்டு போலீஸ் உயர் அதிகாரியிடம் சொல்ல, அவர் அங்கே கேட்டு சொல்றேன்னு இழுத்தே போவதற்கு பதிலாக நேரடியாக போலீஸ் துறை அமைச்சரை கூண்டில் ஏற்றி ஒரே ஒருமுறையேனும் யாரவது ஒரு நீதிபதி அவர்கள் செய்வீர்கள் என்றால் ஈரல் கெட்டுப்போன முன்னாள் போலீஸ் மந்திரி சொன்ன வார்த்தை இது போலீஸ் துறை சீர்படும் என்பதுதான் நமது கோரிக்கை
0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
28 டிச,2024 - 02:56 Report Abuse
ஜெகன் இதில்வேறு Proud Sanghi, மஹாதேவன் கருத்தில் என்ன தவறு? உங்கள் கருத்து sanghi கருத்து போல இல்லை. வெளிச்சம் தேவைதான். மறுப்பதற்கில்லை. பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கவேண்டுமே தவிர, நாம் இருக்குமிடத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று நினைப்பது சரியா? பொது இடத்தில் புகைபிடிக்ககூடாதென்று, புகைபிடிப்பதெற்கென்றே தனி இடங்கள் உண்டு. ஒருவேளை ஜெகன் மனம் இப்படி நினைக்கிறதோ
0
0
Reply
Sivasankaran Kannan - chennai,இந்தியா
27 டிச,2024 - 21:13 Report Abuse
பேய்கள் அரசாள பிணம் தின்னும் கழுகுகள்.. இந்த திராவிட மல மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இன்னும் என்ன கேவலங்களை சந்திக்க போகிறதோ..
0
0
Reply
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 20:58 Report Abuse
காவல்துறை பிரஸ் மீட் நடத்துவது சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் .
0
0
raja - Cotonou,இந்தியா
28 டிச,2024 - 03:03Report Abuse
உன் வீட்டு பெண்களுக்கு நடந்தாலுமா கொத்தடிமையே...
0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 20:38 Report Abuse
அறிக்கை அவர்களே சொல்கிறார்கள் technical glitze காரணமாக சில மணித்துளிகள் அந்த அறிக்கை வெளிப்படையாக இருந்தது அதென்ன பின் அது முடக்க பட்டு விட்டது என்று பின் காவல்துறை வெளியிடவில்லை என்றால் எப்படி அது எப்படி இந்த வழக்கில் மட்டும் தவறுதலாக வெளியிடப்பட்டது .commisioner 2013 -2020 குற்றவாளி மேல் எந்த பாலியல் வழக்கும் இல்லை என்கிறார் ஊடகங்கள் 2011 இல் இவர் மேல் ஒரு பாலியல் வழக்கு இருந்தது என்கிறார்கள் அது ஏன் 2013 என்று வரைமுறை செ ய்கிறார்கள்
0
0
Reply
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 20:37 Report Abuse
படிக்கும் மாணவ மாணவிகளே தங்கள் பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு தெரியாமல் சட்ட விரோத செயல்களில் ஈடுபட கேமராக்களை நிர்வாகதினர் உதவியுடன் செயல்படாமல் செய்து விடுவது வழக்கம்தான் .
0
0
raja - Cotonou,இந்தியா
28 டிச,2024 - 03:06Report Abuse
எப்புரரா இப்படி ஒரு முரட்டு முட்டு... உன்னை கூப்பிட்டு விசாரிக்க போகிறார்கள் ஜாக்கிரதை...
0
0
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
28 டிச,2024 - 04:15Report Abuse
உங்கள் வீட்டிலிருந்து அங்கே படிக்கப்போனவர்கள் சொன்னார்களா என்ன? எவ்வளவு கீழ்த்தரமான புத்தி. நிச்சயம் நீயெல்லாம் உருப்படவே மாட்ட.
0
0
Reply
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 20:32 Report Abuse
TC வாங்கி கொடுத்துவிடுவேன் என்று கூறியுள்ளதற்கு நிர்வாக குறைபாடுகளே காரணம் . பலமுறை நடந்துள்ளதால் அதற்க்கு வேந்தரும் துணை வேந்தரும்தான் பொறுப்பு. நீதிபதிகள் துணை வேந்தரை அழைத்து விசாரிக்க வேண்டும்.
0
0
Reply
அப்பாவி - ,
27 டிச,2024 - 20:28 Report Abuse
மாவுக்கட்டு மர்மத்தை நேராப் பாத்து விசாரிக்கலாமே. ஃப்ராடே அங்கேதான் திடங்குது யுவர் ஆனர்.
0
0
Reply
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 20:26 Report Abuse
மாணவ மாணவிகள் தன நண்பருடன் பேச காட்டுக்குள் சென்று பேச வேண்டுமா?
0
0
raja - Cotonou,இந்தியா
28 டிச,2024 - 03:11Report Abuse
அட கூமுட்டையே அந்த கேம்பசே காட்டுக்குள்ள தான் இருக்கு.....முன்ன பின்ன போயி பார்த்திருந்தால் தெரியும்.. அங்க வெளியால் எப்படி உள்ளுகுள்ள வந்தான் அத கேக்க துப்பு இல்லை...கேவலம் ருவா இரநூறுக்கு மாங்கு மாங்குன்னு திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பத்துக்கு முட்டு குடுகிறவன் கிட்ட வெற என்ன எதிர் பார்க்க முடியும்..
0
0
Reply
Jagan (Proud Sangi) - Chennai,இந்தியா
27 டிச,2024 - 19:47 Report Abuse
இது வேண்டுமென்றே கசியவிட பட்டதாக தெரிகிறது. நாளைக்கு பின்ன யாராவது புகார் குடுத்தால் சந்தி சிரிக்க வைக்க படும் என்ற எச்சரிக்கை
0
0
Reply
மேலும் 49 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement