ஜிம்பாப்வே அணி ரன் குவிப்பு * சதம் விளாசினார் சீன் வில்லியம்ஸ்

ஹராரே: 'பாக்சிங் டே' டெஸ்டில் சீன் வில்லியம்ஸ் சதம் விளாச, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 363/4 ரன் எடுத்திருந்தது.
ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நேற்று ஹராரேயில் பாக்சிங் டே போட்டியாக துவங்கியது.
28 ஆண்டுக்குப் பின், சொந்தமண்ணில் பாக்சிங் டே டெஸ்டில் (இதற்கு முன் 1996, எதிரணி-இங்கிலாந்து) களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தது. எவ்வித முதல் தர போட்டியிலும் பங்கேற்காத கசன்பர் (ஆப்கானிஸ்தான்), நியூமென் (ஜிம்பாப்வே) உட்பட, இரு அணியிலும் தலா 4 என, 8 வீரர்கள் அறிமுகம் ஆகினர்.
கர்ரான் அரைசதம்
ஜிம்பாப்வே அணிக்கு ஜாயலார்டு (9), பென் கர்ரான் ஜோடி துவக்கம் தந்தது. கர்ரான் 68 ரன் எடுத்தார். கைட்டனோ 46 ரன்னில் திரும்பினார். சீன் வில்லியம்ஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், டெஸ்ட் அரங்கில் 5வது சதம் அடித்தார். கேப்டன் எர்வின் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 363 ரன் எடுத்திருந்தது. சீன் வில்லியம்ஸ் (145), எர்வின் (56) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement