பாக்., அணி திணறல் * ஐந்து விக்கெட் சாய்த்தார் பேட்டர்சன்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று பாக்சிங் டே போட்டியாக செஞ்சுரியனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
பேட்டர்சன் அபாரம்
பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூது (17), செய்ம் அயுப் (14) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மறுபக்கம் வேகத்தில் மிரட்டினார் டேன் பேட்டர்சன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசமை, 4 ரன்னில் அவுட்டாக்கினார். ஷகீல் 14 ரன் மட்டும் எடுத்தார். அரைசதம் அடித்த கம்ரான் குலாம் (54), பேட்டர்சன் பந்தில் வீழ்ந்தார்.
தொடர்ந்து மிரட்டிய இவர், முகமது ரிஸ்வானை (27) வெளியேற்றினார். ஜமால் 28, சல்மான் 18 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்காவின் பேட்டர்சன் 5, கார்பின் 4 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி (2), ரிக்கிள்டன் (8), ஸ்டப்ஸ் (9) அதிர்ச்சி கொடுத்தனர். முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 82 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (47), கேப்டன் பவுமா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement