பனி மூட்டத்தால் வட்டமடித்த விமானம்
ஓமலுார்:சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது. ஏ.டி.ஆர்., ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று அதிகாலை முதல், சேலத்தில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலை, 11:00 மணிக்கு, பெங்களூரு செல்லும், 'இண்டிகோ' விமானம், சேலத்தில் தரை இறங்க முடியாமல், தாரமங்கலம் வரை, இரு முறை வட்டம் அடித்தது.
பின், 11:25 மணிக்கு, 'சிக்னல்' கிடைத்து தரை இறங்கிய விமானம், மீண்டும், 11:50க்கு புறப்பட்டு சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement