கலையாஞ்சலியில் வெளிப்பட்ட திறமை

திருப்பூர்; 'கலையாஞ்சலி' நிகழ்ச்சியில் திறமையில் பளிச்சிட்டனர், குமரன் கல்லுாரி மாணவிகள்.

குமரன் மகளிர் கல்லுாரியில் மாணவியரின் தனிப்பட்ட மற்றும் குழு திறமைகளை வெளிக்கொணரும் வகையில், நேற்று கலையாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி துவக்கி வைத்தார். ரங்கோலி, மெஹந்தி, முகம் மற்றும் நகத்தில் வர்ணம் தீட்டுவது, காய்கறிகளில் கலைநயமிக்க வடிவங்களை உருவாக்குவது, குழு மற்றும் தனிபாடல் ஆகியவற்றில் மாணவிகள் தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.விஜி கணேசன், ரமா ராஜேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு, வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். 3 நாள் நடக்கும் இந்நிகழ்ச்சி, நாளை நிறைவு பெறுகிறது. கல்லுாரி பேரவை பொறுப்பாளர் பொன்மலர், நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement