கைதி எப்படி தப்பினார்?

திருப்பூர்; வழிப்பறி வழக்கில் தொடர்புடைய திருப்பூர், பாரதி நகரை சேர்ந்த சூர்யா, 24 உட்பட, இருவரை நல்லுார் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

கடந்த, 21ம் தேதி மாவட்ட சிறையில் இருந்து கைதி சூர்யா தப்பி சென்றார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறுகையில், ''தப்பிய கைதியை தனிப்படை போலீசார் திருப்பூரில் தேடி வந்த நிலையில், தற்போது துாத்துக்குடியில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

கைதி, அங்கிருந்த இரும்பு வளைய கம்பி வழியாக தப்பித்து இருக்கலாம் என சந்தேகப்பட்டோம். அதற்கான அறிகுறி தென்படவில்லை.

சமையல் கூடத்தில் உள்ள ஒரு சிறு வழியாக தப்பித்தது தற்போது தெரிய வந்தது'' என்றனர்.

Advertisement