மனமகிழ் மன்றத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்; திருப்பூர், குமரானந்தபுரம், எம்.ஜி.ஆர்., நகர், ஜோதிநகர், குமார் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

திருப்பூர், அவிநாசி ரோடு - பி.என். ரோடு இணைக்கும் வகையில் குமரானந்தபுரம் உள்ளது. இப்பகுதியில், மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து நிறைந்திருக்கும். இப்பகுதியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கூடம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு அமைந்தால், மதுக்கூடத்துக்கு வரும் நபர்களால், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படவும், அவர்கள் வரும் வாகனங்களால் விபத்துகள், நெருக்கடி ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் நலன் கருதி, மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது.

Advertisement