திருவொற்றியூரில் நாய்களால் பீதி

திருவொற்றியூர், திருவொற்றியூரில், கார்போரண்டம், என்பீல்டு, எம்.ஆர்.எப்., ஐ.டி.சி., எண்ணுாரில், கோரமண்டல் உரத்தொழிற்சாலை, அசோக் லேலண்ட், இந்துஜா பவுண்டரி, கல்ப் ஆயில் நிறுவனம், வடசென்னை அனல் மின் நிலையங்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட பெரிய, சிறு - குறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இரவு பணி முடித்து நள்ளிரவு நேரங்களில் வீடு திரும்பும், இருசக்கர வாகன ஓட்டிகளை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக திரியும் தெருநாய்கள் துரத்துகின்றன.

இதனால் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பின் தொடர்ந்து வரும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகின்றன.

சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement