ஸ்ட்ராபெர்ரி சீசன் வரத்து அதிகரிப்பு
சென்னை, சீசன் துவங்கி உள்ளதால், புனேவில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், விவசாயிகள் சாகுபடியை துவங்குவது வழக்கம். சாகுபடி செய்த 10 மாதங்களில், பழங்கள் அறுவடைக்கு வரும்.
தற்போது மஹாராஷ்டிராவில் ஸ்ட்ராபெர்ரி பழ சீசன் களைகட்டத் துவங்கி உள்ளது. புனே அடுத்த மஹாபலேஸ்வர் என்ற இடத்தில் இருந்து, ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.
ஒரு ஸ்ட்ராபெர்ரி பழ பெட்டி 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நான்கு மாதங்கள் வரை சீசன் களைகட்ட வாய்ப்புள்ளது. இதனால், விலை குறையும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement