'ஏற்றுமதிக்கு ரூ.750 கோடி மானியம் வேண்டும்' சீன சிக்கலை வாய்ப்பாக்க முயற்சி
புதுடில்லி:சீன பொருட்கள் இறக்குமதி மீது, அமெரிக்க புதிய அரசு கடுமையாக வரி விதிக்க உள்ளதால், இந்திய ஏற்றுமதிக்கு கிடைத்து உள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 750 கோடி ரூபாய் வட்டி மானியம் வழங்குமாறு அரசை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டால், கிட்டத்தட்ட 2.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கலாம்.
இதனை பயன் படுத்திக் கொள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் ஏற்றுமதியாளர்களுக்கு, ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய மானியம் வழங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது.
சீனாவுக்கு மாற்றாக இந்திய வாய்ப்புகள்
ஜவுளி, ஆடைகள், பொம்மைகள், ரசாயனங்கள், வாகன உதிரிபாகங்கள் காலணி, பர்னிச்சர், வீட்டு அலங்கார பொருட்கள்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement