ரூ.9 கோடி 'லாம்போகினி' கார் ரோட்டில் எரிந்து நாசம்

மும்பை,
மஹாராஷ்டிராவின் மும்பை பிரீச் கேண்டி பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்புடைய லாம்போகினி ரெவெல்டோ சொகுசு கார் நேற்று முன்தினம் இரவு பழுதாகி தீ பிடித்தது.

சொகுசு கார் தீப் பிடித்ததை அந்த வழியாக சென்ற, 'ரேமாண்ட்' நிறுவன இயக்குனரும், தொழிலதிபருமான கவுதம் சிங்கானியா பார்த்து உள்ளார்.

இவர் கார்கள் மீது ஆர்வம் உடையவர் என்பதால், பல்வேறு பாதுகாப்பு அம்சம் இருப்பதாகக் கூறப்படும் 9 கோடி ரூபாய் மதிப்பிலான லாம்போகினி தீப்பிடித்து எரிவதை வீடியோ எடுத்து, தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுஉள்ளார்.

மேலும் அதில், 'மும்பை கடற்கரை சாலையில் லாம்போகினி கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் லாம்போகினியின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு தரங்கள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகின்றன.

இவ்வளவு விலை கொடுத்து ஒருவர் காரை வாங்குவது சமரசமில்லாத தரத்தை எதிர்ப்பார்த்து தான். ஆனால் இங்கு ஆபத்துதான் உள்ளது' என, விமர்சித்துள்ளார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement