மன்மோகன் அரசியலுக்கு வந்தது எப்படி?

கடந்த, 2005ல் பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் டுல்லிக்கு அளித்த பேட்டியில், மன்மோகன் சிங் கூறியதாவது:

கடந்த 1991 ஜூன் மாதம், காங்கிரசின் நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றபோது, என்னை நிதி அமைச்சராக தேர்வு செய்தார். இந்தத் தகவலை எனக்கு தெரிவிக்க, முதன்மை செயலரை அனுப்பியிருந்தார். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதற்கடுத்த நாள் காலையில், நரசிம்ம ராவே என்னை அழைத்தார். நல்ல உடை அணிந்து, உடனே ஜனாதிபதி மாளிகைக்கு வரும்படி கூறினார். இப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

Advertisement