தடை பிளாஸ்டிக் பொருட்கள் ரூ.15 ஆயிரம் அபராதம்
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி காந்தி ரோடு, சாத்துார் ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் மேற்பார்வையாளர்கள், துாய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழிப் பைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில் ஏழு வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement