பேக்கரியில் வாங்கிய சிக்கன் பிரைடு ரைஸில் புழு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பேக்கரி ஒன்றில் வாங்கிய சிக்கன் பிரைடு ரைஸில் புழுக்கள் இருந்ததாக கல்லுாரி மாணவர்கள் புகார் கூறினார்.

ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பேக்கரி உள்ளது. இங்கு கல்லுாரி மாணவர்கள் சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட சென்றனர். இவர்களுக்கு வழங்கிய சிக்கன் பிரைடு ரைஸில் புழுக்கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமசாமி ,சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் அந்த பேக்கரியில் சோதனை நடத்தினர். அப்போது சிக்கனில் அளவுக்கு அதிகமாக கலர் ரசாயனப்பொடி இருந்ததாக கூறி 5 கிலோ சிக்கனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Advertisement