விரிவாக்க பகுதியில் ரோடு இன்றி மக்கள் அவதி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை விரிவாக்க பகுதியில் ரோடு இல்லாததால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி 25 வது வார்டில் நேதாஜி நகர் விரிவாக்க பகுதி. இங்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் இருந்து நேதாஜி நகர் விரிவாக்க பகுதி வழியாக செம்பட்டி செல்லும் ரோட்டிற்கு செல்ல அணுகு சாலை உள்ளது. தற்போது இந்த ரோடு மண் ரோடாக உள்ளது.

இதை பயன்படுத்தி செம்பட்டி, இலங்கிபட்டி, ஆத்திப்பட்டி புறநகர் பகுதி மக்கள் அருப்புக்கோட்டை நகருக்கு வந்து செல்வர். நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களும் இந்த மண் சாலையை பயன்படுத்தி தான் செல்ல வேண்டும். முக்கியமான இந்த சாலை மழைக்காலமானால் சேறும் சகதியுமாக நடக்க முடியாமலும், டூவீலர்களில் செல்ல முடியாமலும் உள்ளது.

ரோடு இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த மண் சாலையை தார் ரோடு ஆக மாற்றினால் காந்திநகர் வழியாகச் செல்லும் திருச்சுழி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும். நகராட்சி நிர்வாகம் இந்த மண் சாலை தார் ரோடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement