ஜீன்ஸ் சர்ச்சை: கார்ல்சன் நீக்கம்

நியூயார்க்: அமெரிக்காவில் உலக ரேபிட் அண்டு பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இரண்டாவது நாள் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, நார்வேயின் கார்ல்சன், ஜீன்ஸ் அணிந்து வந்தார். விதிகள் படி இதற்கு அனுமதி இல்லை என்பதால், ரூ. 17,000 அபராதம் விதிக்கப்பட்டது.
விதி மீறிய ரஷ்ய வீரர் நோபோம்னியாட்சிக்கும் இதுபோல அபராதம் விதிக்கப்பட்டது. பின் உடனடியாக ஆடை மாற்றிக் கொண்டார்.
ஆனால், கார்ல்சன், 9 வது சுற்றுக்கு முன் வேறு ஆடை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், இதை ஏற்க மறுத்த கார்ல்சன், 'மறுநாள் மாற்றி வருகிறேன்,' என்றார்.
இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில், 9 வது சுற்றில் கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த இரு தொடரில் சாம்பியன் ஆன கார்ல்சன், மீதமுள்ள போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து வெளியேறினார்.

Advertisement