பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிவு: பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
சென்னை: 'அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர்.,யை வெளியிட்டதால், மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று (டிச.,28) நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த அறிக்கையை சீல் வைத்த உறையில், போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசு தரப்பில் கூறியதாவது:
'நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம். எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர்., இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உடனே முடக்கப்பட்டு விட்டது.
கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின், அது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 14 பேர் தங்கள் மொபைல் மூலமாக எப்.ஐ.ஆர் காப்பியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டோம்.
பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். வழக்கை வேறு சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறால் வெளியாகிவிட்டது.
எப்.ஐ.ஆர்.,யில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்களை வெளியிட்டவர்கள், ஊடகங்கள் அனைவருமே பதில் கூறியாக வேண்டும். போலீஸ் துறை கசியவிடவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமில்லை; அனைவருக்குமே உள்ளது. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணை எப்படி குற்றம் சாட்டுவது என்பதற்கு உதாரணமாக எப்.ஐ.ஆர்., உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறும்போது போலீஸ் அதிகாரி உதவி செய்ய முடியாதா?
இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பிறகும், 14 பேர் அதை பார்த்தது எப்படி? போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. யார் எப்.ஐ.ஆர்., பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை வெளியானதால், அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து (103)
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
28 டிச,2024 - 22:13 Report Abuse
நீதிமன்றங்களை அரசியல் மேடையாக மாற்றிவிட்ட இருவரையும் கூண்டிலடைக்கவேண்டும்
0
0
Reply
sundar - xhennai,இந்தியா
28 டிச,2024 - 21:46 Report Abuse
திராவிட மாடல் சார் இந்தியாவிலேயே கல்வியில் முன்னேறிய மாநிலம் சார். ஆனா இன்னும் குழந்தைகள் பெண்கள் மீதான வன் கொடுமை வழக்கில் எஃப் ஐ ஆர் எழுதத் தெரியாது சார். அதன் இரகசியமும் காக்கத் தெரியாது சார்.ஆனா பாருங்க நாங்க ஸ்காட்லாண்டு யார்ட் போலிஸுக்கு நிகரானவங்க சார்.நாங்க திராவிட மாடல் சார்.
0
0
Reply
Raja - Coimbatore,இந்தியா
28 டிச,2024 - 21:17 Report Abuse
நஷ்ட ஈட்டுப் பணத்தை டீம்கா , காவல் துறை, குற்றவாளி. மற்றும் எஃப் ஐ ஆர் தரவிறக்கம் செய்தோர் ஆகியோரிடம் வசூல் செய்யச் சொல்லுங்க சார்.
0
0
Reply
sundar - xhennai,இந்தியா
28 டிச,2024 - 20:40 Report Abuse
சார் சார் , அந்த சார் யார் என்று விசாரிக்கச் சொல்லுங்க சார்.மேலும் எய்ம்ஸ் மருத்தவமனை டாக்டர் முன்னிலையில் நீதிமன்றத்தில் , குற்றவாளியின் பேண்டேஜ் கட்டைப் பிரிச்சு சோதனை பண்ணச் சொல்லுங்க சார்.குற்றவாளியின் தொலைபேசி அழைப்புகளை ட்ராய் நிறுவனம் மூலம் ஆராய வேண்டும் சார்..நஷ்ட ஈட்டுப் பணத்தை டீம்கா , காவல் துறை, குற்றவாளி. மற்றும் எஃப் ஐ ஆர் தரவிறக்கம் செய்தோர் ஆகியோரிடம் வசூல் செய்யச் சொல்லுங்க சார்.
0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
28 டிச,2024 - 20:16 Report Abuse
தமிழக அரசியலில், இது போல் மு. கருணாநிதி அவர்கள் காலத்தில் கூட நடைபெறவில்லை. இவ்வளவு கேவலப்பட்டும் குடும்ப அரசியலில் மும்மரமாக இருக்கும் முதல்வர்.
0
0
Reply
raman - Madurai,இந்தியா
28 டிச,2024 - 20:12 Report Abuse
மக்கள் வரிப் பணம் எதற்கு. போலீஸ் அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் சம்பளத்தை பிடித்து இதை கொடுக்க வேண்டும்
0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
28 டிச,2024 - 20:12 Report Abuse
நீதி மன்றத்திற்கே காதில் பூ சுற்றுகிறார்கள். பலே கில்லாடிகள். சிபிஐ வசம் இந்த கேசை விசாரிக்க உத்தரவு இட வேன்டும்
0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
28 டிச,2024 - 19:22 Report Abuse
திருட்டு திராவிட அகராதியில் ஒருவன் கெட்டவன் என்றால் நல்ல அகராதியில் அவன் நல்லவன் என்று அர்த்தம் அப்படி இருக்கின்றது இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஆட்சி
0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
28 டிச,2024 - 18:49 Report Abuse
போலீஸ் மந்திரி என்ன பண்றார்?
0
0
Srinivasan K - ,
28 டிச,2024 - 20:23Report Abuse
eating mixture why he should bother
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
28 டிச,2024 - 17:47 Report Abuse
தமிழக அரசு எதையும் பாடமாக எடுத்துக்கொள்வதில்லை .....அவர்களின் ஆணவ போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறதே தவிர குறையவிலை ...
0
0
Reply
மேலும் 92 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement