சிவன் கோவில்களில் பிரதோஷம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது.

சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தன.

திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில், உள்ளாவூர் அகத்தீஸ்வரர் கோவில், கோவிந்தவாடி கைலாச நாதர், தேவரியம்பாக்கம்கேதார கவுரீஸ்வரர், வேளியூர் உதயகிரிஸ்வரர்,விஷகண்டிகுப்பம்சக்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் சனிப்பிரதோஷம் நடந்தன.

Advertisement