பருத்தி இறக்குமதி வரியை நீக்க ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை

கோவை: முதல் தர பருத்தி விளைச்சல் பற்றாக்குறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இறக்குமதி மீதான வரியை ரத்து செய்ய, மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இந்தியாவில், அக்., முதல் செப்., வரையிலான காலகட்டம் பருத்-திப் பருவமாக கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 300 முதல் 323 லட்சம் பேல் பருத்தி மகசூல் செய்யப்படுகிறது.


இந்தியாவின் 90 சதவீத பருத்தி அறுவடை, டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நடைபெறுகிறது. பருத்திக்கான தேவை அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்படுகிறது.
பருத்தி இறக்குமதி மீது, 11 சதவீத வரி விதிக்கப்படுகிறது. நடப்-பாண்டில், முதல் தர பருத்தி மகசூல் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிக தேவையை கருதி, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என மறுசுழற்சி ஜவுளிக் கூட்ட-மைப்பு (ஆர்.டி.எப்.,) வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் ஜெயபால் கூறியதாவது:
2024-25 சீசனில், முதல் தர பருத்தி விளைச்சல் பற்றாக்குறை ஏற்-படும் நிலை உள்ளது. எனவே, குறைந்தபட்சம் 50 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்யும் வகையில், அரசு தாமதமின்றி, இறக்-குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் வாயிலாக, ஜவு-ளித் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
தற்போது நூற்பாலைகளை விட, வர்த்தகர்கள் மற்றும் சி.சி.ஐ., நிறுவனங்களே மூன்று மடங்கு பருத்தியை வாங்கி, இருப்பு வைத்து வருகின்றன.
இதனால், கடந்த காலங்களைப் போல
செயற்கை விலையேற்றம் செய்யும் சூழல் உருவாகி வருகிறது. மத்திய
அரசு இதைத் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement