மணமேடையில் மாப்பிள்ளையை எட்டி உதைத்த முன்னாள் காதலி

புதுடில்லி,
மணமேடையில், மணப்பெண் கண் எதிரே மாப்பிள்ளையை அவரது முன்னாள் காதலி எட்டி உதைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சமூக வலைதளங்களில், வேகமாக நேற்று பரவிய வீடியோ ஒன்று அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதில், மணப்பந்தலுடன் அமைக்கப்பட்டுள்ள மேடையில், மணமகனுக்கு மணப்பெண் மாலை அணிவிக்கிறார். இதையடுத்து, மணப்பெண்ணுக்கு மணமகன் மாலை அணிவிக்க முயன்றார்.

அப்போது, மணமேடைக்கு திடீரென வரும் பெண் ஒருவர், மணமகனை பின்னால் இருந்து எட்டி உதைத்தார். இதில், சிறிது துாரம் சென்று அவர் கீழே விழுந்தார். அவரை அந்த பெண் மீண்டும் சரமாரியாக தாக்கினார்.

இதை பார்த்த மணப்பெண் வீட்டார் மற்றும் மணமகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மணமகனை தாக்கியது, அவரது முன்னாள் காதலி என கூறப்படுகிறது.

தன் கண் எதிரே வருங்கால கணவர் தாக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் இல்லை. ஆனாலும், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement