வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு
சென்னை: ''சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு-களை உலகளவில் கொண்டு சென்று, சந்தை வாய்ப்பை ஏற்ப-டுத்த, தமிழகம் முழுதும் வாங்குவோர், விற்போர் சந்திப்புகள் நடத்துவதற்கு, 5.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
தமிழக குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக பொருட்-களை கொள்முதல் செய்வதற்காக, 'டான்ஸ்டியா' எனப்படும் தமி-ழக சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில், சென்னை நந்தம்-பாக்கம் வர்த்தக மையத்தில், 'சவ்மெக்ஸ் 2024' தொழில் கண்-காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இது இன்று நிறைவடை-கிறது.
இதில், பொது மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு-கள் அடங்கிய கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் கூறியதாவது:
கடந்த மாதம் அரசின் சார்பில், கோவையில் வாங்குவோர், விற்-போர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், 14 வெளிநாடுகளில் இருந்து, 28 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 115.35 கோடி ரூபாய்க்கு கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடத்தப்பட்ட வாங்குவோர், விற்போர் சந்திப்பில், 174 நிறுவனங்-களிடம் இருந்து, 42.68 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு-களை உலகளவில் கொண்டு சென்று, சந்தை வாய்ப்பை ஏற்ப-டுத்த தமிழகம் முழுதும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்-தப்படுகிறது. இதற்காக, 5.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.