பஸ்சில் போன் பேச்சு ஓட்டுநர் 'சஸ்பெண்ட்'

உத்திரமேரூர்: பணியின்போது, மொபைல் போனில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டிற்கு இயக்கப்படும் 'தடம் எண்: டி-68' அரசு பேருந்தை, கடந்த 24-ம் தேதி, உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டுனர் தருமன், 50, இயக்கினார்.

அப்போது அவர், மொபைல் போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதை கண்ட, காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலதுணை மேலாளர் பொன்னுபாண்டி, மொபைல் போனை பறிமுதல் செய்தார்.

அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,ஓட்டுநர் தருமனை 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement