4 ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும்: அதிகாரி நம்பிக்கை

8


மதுரை: '' மதுரை மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்பட்டு 4 ஆண்டுகளில் நிறைவடையும்,'' என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார்.


மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம், ரூ.11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. ஒத்தக்கடை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் துவங்கி உயர்நீதிமன்றம், புதுார், தல்லாகுளம், கோரிப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே ஸ்டேஷன், ஆண்டாள்புரம், திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரை 32 கி.மீ., துாரத்திற்கு 27 ஸ்டேஷன்களுடன் அமையவுள்ளது.புதுாரில் ஓட்டல் தமிழ்நாடு அருகே துவங்கி வைகை ஆற்றின் கீழாக ஆண்டாள்புரம் வரை சுரங்கப்பாதையாக அமைய உள்ளது. அமெரிக்கன் கல்லுாரி, மீனாட்சி அம்மன் கோயில் ஸ்டேஷன்கள் சுரங்கப்பாதையில் அமைய உள்ளன.


இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையிலான குழுவினர் மதுரையில் இன்று(ஜன.,17) ஆய்வு செய்தனர்.

இதன் பிறகு சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்படும். மத்திய அரசு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் துவங்கும். 4 ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement