ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி; ரத்தன் டாடாவை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி!
புதுடில்லி: இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் இன்று (ஜன.,17) போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜன.22 வரை 3 வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து கண்காட்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பல புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் கார்களின் தேவை அதிகரித்து வருகிறது.
ஒரு வருடத்தில் 2.5 கோடி கார்கள் விற்பனையாகி உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர். இந்த இரண்டு ஜாம்பவான்களும் இந்திய நடுத்தர வர்த்தகத்தினரின் வாகனத்துறையில் கனவை நனவாக்க பெரிதும் உதவி உள்ளனர்.