காலாவதியான  பொருள் விற்பனை தடுக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், பொருட்கள் விற்பனையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடுக்க வலியுறுத்தி குளிர்பானத்தை தரையில் ஊற்றி மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மலைக்கண்ணன். அவரது நண்பர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குளிர்பானத்தை கீழே கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவர் கூறுகையில், தனது 2 வயது குழந்தைக்கு கடையில் குளிர்பானம் வாங்கிக் கொடுத்ததாகவும்,

குழந்தை வாந்தி எடுத்த போது அது காலாவதியான குளிர்பானம் என தெரிய வந்தது.

இதுதொடர்பான புகாரில் உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடைக்கு அபராதம் விதித்துள்ளனர். காலாவதியான குளிர்பானங்களை தடை செய் வேண்டும்.

அதை விற்கும் கடையை பூட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement