காயத்துடன் வாலிபர் சடலம்

ஈரோடு: ஈரோடு, வெண்டிபாளையம், ஜெல்லகிருஷ்ணா நகர் சாலையில், 25 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத வாலிபர், இடது கண்ணில் அடிபட்டு வீங்கியும், வலது கண்ணில் சிராய்ப்பு காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கடந்த, 1ம் தேதி காலை கிடந்தார்.

அப்பகுதி மக்கள் ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார்


மோட்டார் திருடிய 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தை சேர்ந்-தவர் அய்யாசாமி, 76; தண்ணீர் பந்தல்பாளையம் செங்குந்தர் நகர் மூன்றாவது வீதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக வைத்-திருந்த மின் மோட்டார் திருட்டு போனது. புகாரின்படி வீரப்பன்-சத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக சூளை, ஈ.பி.பி.நகர், ஜனதா காலனி சந்தோஷ்குமார், 24, மாணிக்கம்பா-ளையம், முனியப்பன் கோவில் வீதி, வக்கீல் தோட்டம் கலைய-ரசன், 22, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement