சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

அரூர்: அரூரில், அரசு கல்லுாரி வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. அரூர்-தர்மபுரி சாலையில், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கல்லுாரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கல்லுாரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்தாண்டு அரூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement