தமிழகத்தில் கை கொடுத்த பருவமழை: முழுமையாக நிரம்பிய 5,718 ஏரிகள்
கரூர்: தமிழகத்தில் பரவலாக பெய்த பருவ மழையால், அணைகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதுவரை, 5,718 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
தமிழகத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம், 14,140 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 2,040 ஏரிகள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரை மாவட்டத்தில், 1,340, புதுக்கோட்டை மாவட்டத்தில், 1,132 ஏரிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை. தொடர் மழை பெய்ததால் பல மாவட்டங்களில், 100 சதவீதம் ஏரிகள் நிரம்பி உள்ளன.
இதன்படி தமிழகத்தில், 5,718 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 3,686 ஏரிகள், 76 முதல், 99 சதவீதம், 2,285 ஏரிகள், 51 முதல் 75 சதவீதம், 1,451 ஏரிகள், 26 முதல் 50 சதவீதம், 816 ஏரிகள், ஒன்று முதல், 25 சதவீதம் நிரம்பியுள்ளன. 184 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.
கன்னியாகுமரியில் உள்ள, 2,040 ஏரிகளில், 562 ஏரிகளும், திருவண்ணாமலையில் உள்ள, 697 ஏரிகளில், 529 ஏரிகளும், தஞ்சாவூரில் உள்ள, 641 ஏரிகளில், 429 ஏரிகளும், 100 சதவீதம் நிரம்பி உள்ளன. இதற்கு நேர்மாறாக நாகப்பட்டினத்தில் மொத்தமுள்ள, 79 ஏரிகளில், 36 ஏரியிலும், தர்மபுரியில் மொத்தமுள்ள, 74 ஏரிகளில், 29 ஏரியிலும் நீர் இருப்பு இல்லை.
கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள, 19 ஏரிகளில், இரண்டில், 100 சதவீதம், ஒரு ஏரி, 76 முதல் 99 சதவீதம், மூன்று ஏரிகள், 26 முதல் 50 சதவீதம், 10 ஏரிகளில், ஒன்று முதல் 25 சதவீதம் நிரம்பியுள்ளன. மூன்று ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள, 22 ஏரிகளில் ஐந்து ஏரிகள், 100 சதவீதம், நான்கு ஏரிகள், 76 முதல் 99 சதவீதம், ஒரு ஏரியில், 51 முதல் 75 சதவீதம், நான்கு ஏரிகளில், 26 முதல் 50 சதவீதம், ஆறு ஏரிகளில் ஒன்று முதல், 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இரண்டு ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள, 107 ஏரிகளில், 57 ஏரிகள், 100 சதவீதம், 10 ஏரிகள், 76 முதல் 99 சதவீதம், ஆறு ஏரிகள், 51 முதல் 75 சதவீதம், ஆறு ஏரிகள், 26 முதல் 50 சதவீதம், ஏழு ஏரிகளில் ஒன்று முதல் 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 21 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள, 79 ஏரிகளில், 25 ஏரிகள், 100 சதவீதம், எட்டு ஏரிகள், 76 முதல் 99 சதவீதம், இரண்டு ஏரிகளில், 51 முதல் 75 சதவீதம், நான்கு ஏரிகளில், 26 முதல் 50 சதவீதம், நான்கு ஏரிகளில் ஒன்று முதல், 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 36 ஏரிகளில் நீர் இருப்பு இல்லை.
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள, 27 ஏரிகளில், 10 ஏரிகள், 100 சதவீதம், 11 ஏரிகளில், 76 முதல் 99 சதவீதம், ஒரு ஏரியில், 51 முதல் 75 சதவீதம், ஒரு ஏரியில், 26 முதல் 50 சதவீதம், ஒரு ஏரியில், ஒன்று முதல் 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மூன்று ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. சென்னையில் மொத்தமுள்ள, 28 ஏரிகளில், 21 ஏரிகளில், 100 சதவீதம், நான்கு ஏரிகள், 76 முதல் 99 சதவீதம், மூன்று ஏரிகளில், 51 முதல் 75 சதவீதம் நீர் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள, 564 ஏரிகளில், 410 ஏரிகள், 100 சதவீதம், 146 ஏரிகள், 76 முதல் 99 சதவீதம், 5 ஏரிகளில், 51 முதல் 75 சதவீதம், இரு ஏரிகளில், 26 முதல் 50 சதவீதம், ஒரு ஏரியில் ஒன்று முதல் 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
பருவமழை கை கொடுத்ததால், தமிழகத்தில் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு குறைவு, விவசாய சாகுபடி நன்றாக இருக்கும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.