வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

உடுமலை : மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன், இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மடத்துக்குளம் தாலுகாவில் வசிக்கும், ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து, பல ஆண்டுகளாகியும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், சட்ட விரோதமாக நடக்கும் மது, கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாத போலீசாரை கண்டித்தும், ஐக்கிய கம்யூ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன், மாநில நிர்வாகிகள் அப்பாஸ், பால்நாராயணன், தெய்வக்குமார், மணியன், லட்சுமி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement