ஆக்டாவியா ஆர்.எஸ்., 'மாஸ் என்ட்ரி'
'பாரத் மொபிலிட்டி' வாகன கண்காட்சியில், 'ஸ்கோடா' நிறுவனம், அதன் நான்காம் தலைமுறை 'ஆக்டேவியா ஆர்.எஸ்., மற்றும் சூப்பர்ப்' செடான் கார்களையும், இரண்டாம் தலைமுறை 'கோடியாக்' எஸ்.யூ.வி., காரையும் காட்சிப்படுத்த உள்ளது.
ஆக்டாவியா ஆர்.எஸ்.,
ஸ்கோடா நிறுவனத்தின் 'ரேலி ஸ்போர்ட்' மாடல் கார்களுக்கு 'ஆர்.எஸ்.,' என்ற இணை பெயர் வழங்கப்படும். கடந்த முறை, ஆக்டாவியா 'ஆர்.எஸ்., - 245' கார், ஆட்டோ எக்ஸ்போ 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பி.எஸ்., - 6 விதிமுறைகளின் காரணமாக, இந்த காரின் உற்பத்தி, 2023ல் நிறுத்தப்பட்டது. தற்போது, முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
கோடியாக்
இந்த கார், தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பழைய காரை ஒப்பிடுகையில், நீளம் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், உட்புற இடம் மற்றும் பூட் ஸ்பேஸ் அதிகரித்துள்ளது. இம்முறை, 7 சீட்டர் வகையில் வரும் இந்த கார், ஜூனில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.