' தினமலர்' மெகா கோலப்போட்டி விழுப்புரத்தில் நாளை நடக்கிறது

விழுப்புரம்: தினமலர் நாளிதழ், ருசி பால் இணைந்து நடத்தும், மெகா கோலப்போட்டி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், நாளை (5ம் தேதி) நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக, தினமலர் நாளிதழ், மெகா கோலப்போட்டியை நடத்தி வருகிறது.

இந்தாண்டு 'தினமலர்', 'சூப்பர் ருசி பால்' நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மெகா கோலப் போட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (5ம் தேதி) நடக்கிறது. கோலப்போட்டி அதிகாலை துவங்குகிறது.

கோலப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அதிகாலை 6:00 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். புள்ளி கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளாக போட்டி நடக்கிறது.

இப்போட்டியில் 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள முடியும்.

கோலமிடுவதிற்கு ஒவ்வொரு நபருக்கும் 4 அடிக்கு 4 அடி இடம் ஒதுக்கப்படும். அந்த இடத்தில் மட்டுமே கோலமிட வேண்டும். கோலமிடுவதற்கு தேவையான பொருட்களை தாங்களே எடுத்துவர வேண்டும்.

கோலமிட 1 மணி நேரம் ஒதுக்கப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட பெண் ஒருவரை உதவிக்கு அழைத்து வரலாம். கோலமிட வரும்போது, போன் மூலம் முன்பதிவு செய்த விபரத்தை கொண்டு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக தலா ஒரு வாஷிங்மெஷின் வழங்கப்பட உள்ளது.

தங்க நாணயம், ரெப்ரிஜிரேட்டர், எல்.இ.டி., டிவி, சைக்கிள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் காத்திருக்கிறது. கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க அதிகாலையிலேயே வாங்க....

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இன்றி, பங்கேற்கும் அனைவருக்கும், அசத்தலான தொகுப்புகள் அடங்கிய பரிசு காத்திருக்கிறது.

நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

Advertisement