அனிச்சம்பாளையம் கிராமத்தில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி

விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியம், அனிச்சம்பாளையத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, கலெக்டர் பழனி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 21வது கால்நடைகள் கணக்கெடுக்கும் பணியை, கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் லதா, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மோகன், டாக்டர்கள் பாலாஜி, கீதா, சதானந்தன், சிவா, மகேஸ்வரி, கால்நடை ஆய்வாளர்கள் சமீன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement