ஆண்டின் முதல் நாளில் தங்கம் விலை விர்ர்...!; சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நே ற்று (டிச.,31) ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,110க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.,01) ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் (டிச.22 முதல் ஜன.,01) தங்கம் விலை நிலவரத்தைக் காணலாம்;
டிச.22 - ரூ. 56,800
டிச. 23 - ரூ. 56,080
டிச. 24 - ரூ.56,720
டிச.25 - ரூ. 56,800
டிச.26 - ரூ. 57, 000
டிச.27 - ரூ.57,200
டிச.28 - ரூ.57,080
டிச.29 - ரூ.57,080
டிச.30 - ரூ. 57,200
டிச.,31- ரூ.56,880
ஜன.,01- ரூ.57,200