மா.கம்யூ., 24வது மாநில மாநாடு; விழுப்புரத்தில் தொடங்கியது

விழுப்புரம்; விழுப்புரத்தில் மா.கம்யூ., 24வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது.

விழுப்புரம் ஆனந்தா மண்டபத்தில் நேற்று முதல் நாள் பொது மாநாடு கூட்டம் தொடங்கியது. மாநில குழு உறுப்பினர் பெருமாள் மாநாட்டு கொடியை ஏற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார்.

மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாநில குழு உறுப்பினர் பெருமாள் கொடி உரையாற்றினார். வரவேற்பு குழு தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பேபி மாநாட்டை தொடங்கி வைத்து, கட்சியின் தற்போதைய, எதிர்கால செயல்பாடுகள் குறித்தும், மத்திய பா.ஜ., அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து பேசினார்.

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகிருஷ்ணன், மாநில செயலர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் ரங்கராஜன், எம்.பி.,க்கள் வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் நாகை மாலி, சின்னத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், இந்திய கம்யூ., (எம்.எல்.,) மாநில செயலர் ஆசைத்தம்பி வாழ்த்துரை வழங்கினர்.

முதல் நாள் மாநாட்டில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அரசமைப்பு சட்டம், இயற்கை வளங்களை பாதுகாப்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக அவசியம்.

இதற்கு இடையூறாக உள்ள பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அரசியலை தனிமைப்படுத்வதே முக்கிய அரசியல் கடமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement