தேசிய மின்சக்தி சிக்கன வார விழா

கடலுார்; தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், கடலுார் மின் பகிர்மான வட்டம் சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.

கடலுார், திருப்பாதிரிபுலியூர் வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமை தாங்கினார்.

கடலுார் மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மின்சிக்கன வார விழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கடலுார் செயற்பொறியாளர் வள்ளி, உதவி செயற்பொறியாளர் ரஞ்சித்குமரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement