/ நுால் அறிமுகம்

ஜோதிடம்

ஆசிரியர்: நெல்லை வசந்தன்

பக்கம்: 368, விலை: ரூ.300

வெளியீடு: என்.கே.வி.அகாடமி

ஒவ்வொருவரும் தங்களின் நட்சத்திரம், ராசி, கிரகத்துக்கு ஏற்ப குணாதிசயங்களை பெற்றிருப்பர் என்கிறது ஜோதிடம். முழுமையான அடிப்படை ஜோதிடத்தை கற்க நினைப்பவர்களுக்காக எழுதப்பட்டுள்ள நுால். ராசிக்கேற்ற சிறந்த தலங்களை பற்றிய தகவல்களும் உள்ளன.

---மன மாற்றம் மூலம்

உடல்நலம் பேணுவோம்

ஆசிரியர்: ரம்யா கே.பிரபு

பக்கம்: 198, விலை: ரூ. 220

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

இந்த நுாலின் ஆசிரியர் ஒரு டாக்டர். அதனால், இந்த தலைப்பை இந்த நுாலுக்கு வைத்துள்ளார். மன நலம் எப்படி உடல் நலத்தை பாதிக்கிறது, அதை எந்தெந்த வகைகளில் மேம்படுத்துவது என விளக்கி உள்ளார். நுாலை ஊன்றி படிப்பவரின் மனதில் மாற்றம் உறுதி.

--இரவுக்குறி

ஆசிரியர்: பா.ஜெயவேல்

பக்கம்: 168, விலை: ரூ.200

வெளியீடு: வம்சி புக்ஸ்

மாமல்லபுரம் கடற்கரை மணலில் பிடிமண் பிடித்து, கன்னியம்மனை வணங்கி, இரவெல்லாம் குறி கேட்டு, கொண்டாடும் இருளர்களின் வாழ்வியல், பண்பாடு, பழக்கவழக்கங்கள் சார்ந்த கதைதான் 'இரவுக்குறி'. இதுபோல், 10 சிறுகதையின்தொகுப்பு, இந்நுால்.

Advertisement