அ.தி.மு.க., எதிர்ப்பு போஸ்டரை கிழித்த முன்னாள் எம்.எல்.ஏ.,
குன்றத்துார், சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் செய்து வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க.,வைக் கண்டித்து, 'யார் அந்த சார்' என்ற போஸ்டர்களை அ.தி.மு.க.,வினர் ஒட்டி, கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த போஸ்டர்கள், தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டுள்ளன.
குன்றத்துார் அருகே, மாங்காட்டில் முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்துடன், அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை, ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பழனி ஒவ்வொன்றாக கிழித்து அகற்றினார்.
இந்த வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரவியது.