'சில்மிஷ' முதியவருக்கு 'போக்சோ'

வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு, தன் தாயுடன், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். உறவினரின் வீட்டின் வெளியில், சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரம், 60 என்பவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சிறுமியை மீட்டு, முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சிறுமியின் தாய் புகாரின்படி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், சிதம்பரத்தை நேற்று காலை கைது செய்து விசாரித்ததில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதியானது.

இதையடுத்து, முதியவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement