டிப்பர் லாரி மோதி பெண் பலி
டிப்பர் லாரி மோதி பெண் பலி
பாலக்கோடு, ஜன. 3-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பாபுசாகிப் தெருவை சேர்ந்த பழ வியாபாரி அன்சர். இவரது மனைவி ஜான் அசின்,54. இவருக்கு உடல் நிலை சரி இல்லாததால் நேற்று காலை, 8.30 மணிக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பைபாஸ் சாலையில் மருத்துவமனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜான் அசின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாலக்கோடு போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement