மாநில கலை திருவிழா மாவட்டத்தில் துவக்கம்

மாநில கலை திருவிழா மாவட்டத்தில் துவக்கம்

ஈரோடு, ஜன. 3-
மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் -2 வரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா கடந்த நவ., மாதம் நடந்தது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா இன்று, நாளை நடக்கிறது. ஒன்பது, 10ம் வகுப்புக்கு கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, கங்கா மெட்ரிக் பள்ளி, கங்கா மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த, 4,811 மாணவ--மாணவிகள் கலந்து கொள்கின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்படும். வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

Advertisement