அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம்


சத்தியமங்கலம், ஜன. 3-
அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம், சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியபாமா தலைமை வகித்தார். இளம் பெண்கள், பாசறை மாநில செயலாளர் பரமசிவம், எம்.எல்.ஏ., பண்ணாரி பேசினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பங்கேற்றார். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கார் விபத்தில் முதியவர் பலி
பெருந்துறை, ஜன. 3-
பெருந்துறையை அடுத்த கதிரம்பட்டி, எளையகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; இவரின் மனைவி கமலா, ௬௫; இருவரும் கடந்த, 30ம் தேதி மாலை காரில் பெருந்துறைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர். வாய்க்கால் மேடு அருகில் கார் கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ரத்தினசாமி இறந்தார்.

Advertisement