2024ல் மாவட்டத்தில் 28 கொலை; போலீஸ் தகவல்


ஈரோடு, ஜன. ௩-
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு, 28 கொலைகள் நடந்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாவட்டத்தில் கடந்தாண்டு, 28 கொலைகள் நடந்தன. குடும்ப சண்டையால் ஏழு கொலை நடந்தது. கொலையாளிகள், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 378 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 517 பேர் கைது செய்யப்பட்டு, 102 வாகனங்கள், 844 சவரன் நகை உட்பட மற்றும் சொத்து மீட்கப்பட்டது. 78 கொடுங்குற்ற வழக்குகளில், 158 பேர் கைது செய்யப்பட்டு, ஏழு வாகனங்கள், 621 சவரன் நகை மீட்கப்பட்டது. 408 சாதாரண குற்ற வழக்கில், 329 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 95 வாகனங்கள், 223 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 51,179 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக, 761 வழக்குகள் பதியப்பட்டு 769 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில், 36 குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. 270 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 15 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு, 699 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement