ஆடையில் தீப்பற்றி காயம் அடைந்த சிறுமி 2 மாதத்துக்கு பின் பலி

ஆடையில் தீப்பற்றிகாயம் அடைந்த சிறுமி 2 மாதத்துக்கு பின் பலி
சேலம், ஜன. 4-
சேலம், எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மகள் ஜனனி, 15. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். கடந்த அக்., 5ல், புரட்டாசி சனியையொட்டி, வீட்டில் ஜனனி விளக்கேற்றியபோது, அவரது ஆடையில் தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் தீயை அணைத்து, காயமடைந்த சிறுமியை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 2 மாதங்களாக சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement