ஜல்லிக்கட்டுக்கு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுரை
சேலம், ஜன. 4-
சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா, மஞ்சு விரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் இந்த விழா நடத்த, அதன் ஏற்பாட்டாளர்கள், www.jallikattu.in.gov.in என்ற இணையதளத்தில் ஆவணங்களோடு விண்ணப்பிக்க வேண்டும். பார்வையாளர் மாடங்கள், காலரிகளை, அரசு விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்.
காளைகள் வந்து சேரும் இடம், பதிவு செய்யும் இடம் அந்த இடத்திலிருந்து கால்நடை மருத்துவ பரிசோதனை இடம், வாடிவாசல், காளைகள் ஏறு தழுவும் இடம், தொடர்ந்து காளைகள் ஓடும் தளம், சேகரம் செய்யப்படும் இடம், இறுதியாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வெளியேறும் இடம் முடிய, தகுந்த பாதுகாப்பு அரண், தடுப்பு வேலி அமைத்து, காளைகளுக்கோ மாடுபிடி வீரர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ பாதிப்பின்றி வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவரல் மேனகா, மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன், கால்நடை பராரிப்புத் துறையின் மணடல இணை இயக்குநர் டாக்டர் பாரதி, உட்பட பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.