மருத்துவமனைக்கு கட்டில் வழங்கல்

உடுமலை,; உடுமலை அரசு மருத்துவமனையில் நடந்த நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில், டாக்டர்கள் தரப்பில், நோயாளிகளுக்கான படுக்கைகள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடுமலை கிழக்கு லயன்ஸ் சங்கம் சார்பில், நோயாளிகள் பயன்பெறும் வகையில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டில்கள் வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் குமார் மற்றும் கிழக்கு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement