கஞ்சா விற்றவர் கைது
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு தாமரைக்குளம் ரயில்வே கேட் அருகே, கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிணத்துக்கடவை சேர்ந்தவர் ராஜ்குமார், 24, பெயின்டர். இவர் தாமரைக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.
இதில், ராஜ்குமார் தாமரைக்குளம் ரயில்வே கேட் அருகே, கஞ்சா விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து, 80 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement