பொங்கல் தொகுப்பு விற்பனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு கூட்டுறவுபொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499, பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999 வழங்கப்பட உள்ளது.

இதை நேற்று மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுமொத்த விற்பனை பண்டக சாலையின் சுயேசவை பிரிவில் முதல் விற்பனையை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.

இத்தொகுப்புகள் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள்,கூட்டுறவு விற்பனை சங்கங்கள், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில்கிடைக்கும் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்.

Advertisement