'பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் அதிகரிக்க வேண்டும்'
சேலம்: தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத், சக்தி சேனா மகளிர் அமைப்பின், மாவட்ட மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்ஜி தலைமை வகித்தார். மாநாட்டில் துணைத்தலைவர் கிரிஜா சேஷாத்ரி பேசியதாவது:
பெண்கள் வீர மங்கையாக, வீர நாச்சியார் போன்று எதையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாக தைரியமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது. அதிக பிறப்பு இருந்தால், குடும்பத்தில் ஏற்படும் நல்லது, கெட்டது என, எல்லாவற்றிலும் ஒன்று சேர்ந்து இருப்பர். அவ்வாறு இருக்க, பிறப்பு சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாடு, நம்முடன் இருக்கும். இந்த அமைப்பின் நோக்கத்தை புரிந்து செயல்பட்டால், நீங்களும் சக்தி படைத்த மங்கையாக வருவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.மாநில பொதுச்செயலர் சோமசுந்தரம், இணை செயலர் வேதாந்த கணே சன், பத்ரிநாத் ஆதினம் சாய் விபூதி அம்மா, கோவை இந்திரேஸ்வர மடாலய, ராஜ தேவேந்திர ஸ்வாமிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஸ்துாரிரங்கன் உள்ளிட்டோர் பேசினர்.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.