பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல்

இடைப்பாடி: பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் பதவி தேர்தல், கொங்கணாபுரம் அருகே எட்டிக்குட்டைமேட்டில் நேற்று நடந்-தது.

தேர்தல் பார்வையாளர்களாக, மாநில தேர்தல் பார்வையாளர் பாலகிருஷ்ணன், சேலம் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மணிகண்டன், சேலம் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முத்துக்குமார் செயல்பட்டனர்.தற்போதைய தலைவர் சுதிர்முருகன் உள்பட, 11 பேர் போட்டி-யிட்டனர். நகர, ஒன்றிய தலைவர்கள், பிரதிநிதிகள், ஒன்றிய, நகர முன்னாள் தலைவர்கள் என, 76 பேர் ஓட்டளிக்க தகுதியான-வர்கள். அவர்களில் ஓரிருவரை தவிர மற்றவர்கள் ஓட்டளித்தனர். இதன் விபரங்கள், மாநில தலைமைக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஒப்புதலோடு, தலைவர் யார் என அறிவிக்கப்படும்.

Advertisement