வசதிகளின்றி சின்னத்தம்பியாபுரம் காலனி

சாத்துார்: சாத்துார் அருகே சின்னத்தம்பியாபுரம் காலனியில் ரோடு வாறுகால் வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாத்துார் ஊராட்சி ஒன்றியம் பெத்து ரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டசின்னத்தம்பி யாபுரத்தில் காலனி வீடுகள் கண்மாய் அருகில் அமைந்துள்ளது.

பலத்த மழை பெய்யும்போது கண்மாய்க்கு தண்ணீர் வரும் போது காலனி வீடுகளை சூழ்ந்து நிற்கின்றன. இந்தப் பகுதியில் ரோடு வாறுகால் வசதி இல்லாததால் மழை நீர் வடிந்து செல்லாமல் பல மணி நேரம் கழித்து வடிந்து செல்லும் நிலை உள்ளது.

காலனி வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரும் பாதையில் தேங்கி நிற்பதால் இப்பகுதி மக்கள் சுகாதாரக் கேட்டால் அவதிப்படுகின்றனர். மேலும் பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. மழைக்காலத்தில் இப்பகுதிமக்கள் வீடுகளுக்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.

சின்னத்தம்பியா புரத்தில் உள்ள காலனியிலும் பேவர் பிளாக் ரோடு மற்றும் வாறுகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement